இந்திய விமானப்படை பலத்தை மேலும் வலுவுபடுத்த இந்தியா 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானம். ஆனால், மற்ற விமானங்களில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த பயிற்சி விமானங்களில் உள்ளது.
கடந்த மாதம் 29-ம் தேதி 36 ரபேல் போர் விமானங்களில் இருந்து முதலில் 5 விமானங்கள் மட்டுமே இந்தியா வந்தது. ரபேல் விமானங்கள் இந்தியா வந்தாலும், இந்திய விமானப்படையில் இன்னும் முறைப்படி இணைக்கப்படவில்லை. எனவே இந்த நிகழ்ச்சியை செப்டம்பர் 10-ந் தேதி நடந்த ராணுவ அமைச்சகத்துக்கு விமானப்படை பரிந்துரைத்து உள்ளது. ஆனால், இதுவரை ராணுவ அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை.
ஆனால், 10-ம் தேதி இந்த விழா நடைபெறும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு ரபேல் விமானங்களை முறைப்படி விமானப்படையில் சேர்த்து வைக்கிறார். மேலும், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…
மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…
சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…