கேரள மாநிலம் வயநாடு வந்துள்ள ராகுல் காந்தி இன்று முதியோர் இல்லத்தில் அமர்ந்து மதிய உணவருந்தினார்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தன் நாடாளுமன்ற தொகுதி வயநாட்டிற்கு வந்துள்ளார். இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். அதன் பின்பதாக தொகுதியின் வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், இன்று மலப்புரத்தில் உள்ள காந்தி பவன் முதியோர் இல்லத்தில் ராகுல் காந்தி அங்கிருக்கும் முதியோர்களுடன் மதிய உணவை அருந்தினார்.
இவர் நேற்று காலை மானந்தவாடி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார். இதனை அடுத்து மானந்தவாடியில் சட்ட படிப்பிற்கான நுழைவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் அமர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மதிய உணவை அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…