ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமராவார்; கர்நாடக அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே.!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமராவர் என கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு 2024 இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் சார்பில் (மகாத்பந்தன்) ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களுருவில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில் கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஈஸ்வர் காந்த்ரே, அடுத்த ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றிபெறும் என கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் ஆவார் என அவர் கூறியுள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது போல் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடையும் என தெரிவித்துள்ளார்.