பெங்களூரு: கடந்தாண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் சமயத்தில், அப்போதைய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்ததது. மே 5, 2023இல் வெளியான பல்வேறு செய்தித்தாள்களில் 2019 முதல் 2023 வரை பாஜக பல்வேறு ஊழல்களை செய்துள்ளது என்றும், பசவராஜ் பொம்மை அரசு 40 சதவீத கமிஷன் அரசு என கடுமையாக விமர்சித்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
இந்த விளம்பரங்களை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தனர். காங்கிரஸ் மேற்கொண்ட இந்த பிரச்சாரம் குறித்து கர்நாடகா பாஜக அவதூறு புகார் அளித்தனர். பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி கே.என்.சிவகுமார் தலைமையில் தொடர்ந்து நடைபெறும் வேளையில், முன்னதாக கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.
இதனை அடுத்து, ஜூன் 7ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் கூறியிருந்தது. அதன் படி, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டார் ராகுல் காந்தி.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…