J&K Ex CM Farooq Abdullah says about God Ram [File Image]
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுளள ராமர் கோயில் திறப்பு விழா, கும்பாபிஷேக விழா (Pran Pratishtha) வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி 16ஆம் தேதி விழா ஆரம்பித்து, ஜனவரி 22ஆம் தேதி மதியம் 12.45மணிக்குள் முக்கிய நிகழ்வான கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது.
ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் , உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல்வேறு அரசியல் தலைவர்கள், ஆன்மீக குருக்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்தும் கடவுள் ராமர் பற்றியும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசுகையில், கடவுள் ராமர் இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர் என கூறினார். மேலும், இந்தியாவில் சகோதரத்துவம் குறைந்து வருவதாகவும், அதை புதுப்பிக்க வேண்டும் என்றும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு முயற்சி செய்த மக்களுககு வாழ்த்தக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஃபரூக் அப்துல்லா மேலும் கூறுகையில், ராமர் உலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமானவர் என ஆன்மீக புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது என்பதை நான் முழு தேசத்திற்கும் கூற விரும்புகிறேன். சகோதரத்துவம், அன்பு, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் போன்ற பண்புகளை பகவான் ராமர் பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வாழ்வில் வீழ்ச்சியடைந்தவர்களை எந்தவித மத, இன வேறுபாடின்றி உயர்த்த வேண்டும் என்று எப்போதும் கூறியவர் ராமர். உலகளாவிய பொதுவான போதனைகளை வழங்கியுள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், நம் நாட்டில் குறைந்து வரும் சகோதரத்துவத்தை மீட்டெடுக்க நாட்டு மக்களுக்கு இந்த கருத்துக்களை நான் கூற விரும்புகிறேன். பகவான் ராமர் கூறிய சகோதரத்துவத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என கூற விரும்புகிறேன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…