ரீல்ஸ் மோகம்! தூக்கில் தொங்கியபடி நடித்த சிறுவன்.. ! இறுதியில் நேர்ந்த சோகம்..?

மத்திய பிரதேசம் : இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத்தளங்களில் பிரபலமாகவேண்டும் என்பதற்காக ரீல்ஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ரீல்ஸ் செய்வதற்காக ஆபத்தை உணராமல் அவர்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடுகிறது.
அப்படி தான் மத்திய பிரதேசம் முரைனா மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் ரீல்ஸ் செய்யும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முரைனா மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று ரீல்ஸ் செய்து கொண்டு இருந்தார்.
அந்த சிறுவன் விளையாட்டுத்தனமாக கழுத்தில் கயிறை போட்டுகொண்டு தூக்கில் தொங்குவது போல நடித்துக் கொண்டிருந்தான். இதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வெளியிட்டால் வைரலாகும் என்பதற்காக இதனை அங்கிருந்த அவனுடைய நண்பர்கள் வீடியோ எடுத்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் கழுத்தில் கயிறு இறுகியதால் நிலைமை மிகவும் சோகமாக மாறியது. உண்மையான ஆபத்தை அறியாத அவரது நண்பர்கள், ரீல்ஸ்காக அவன் அப்படி நடிக்கிறார் என்று நம்பி, சம்பவத்தை தொடர்ந்து போனில் பதிவு செய்தனர். அம்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லேன் ரோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்து இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இறந்த சிறுவனின் மொபைல் போனில் இருந்த வீடியோவை போலீசார் கண்டுபிடித்த நிலையில், இது பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025