RSS leader Mohan Bhagwat [Image source : PTI]
கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் மராத்தா சமூகத்தினர் பிரமாண்ட போராட்டம் நடத்தினர். அதில், தங்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாநில அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து , தங்களுக்கு உரிய இடஒதுக்கீடு வேண்டும் என போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதன் பிறகு அந்த போராட்டத்தில் , வன்முறை ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். பல்வேறு வழக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து அம்மாநில தலைநகர் மும்பையிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. மராத்தா சமூகத்தினர் இது தொடர்பாக தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மகாராஷ்டிரா, நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு குறித்து பேசினார். அவர் கூறுகையில், தற்போது வரை சமூகத்தில் சக மனிதர்களை பின்தங்கிய நிலையில் வைத்துள்ளோம். அவர்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை. கடந்த 2000 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.
அவர்களுக்கு சமத்துவம் அளிக்கும் வரை, சில சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் இடஒதுக்கீடும் முக்கியமான ஒன்று. எனவே, அத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு முறையானது தொடர வேண்டும். அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடுகளுக்கு ஆர்.எஸ்.எஸ் சார்பாக நாங்கள் அனைத்து ஆதரவையும் வழங்குகிறோம் என தெரிவித்தார்.
மேலும், சமூகத்தின் கடந்த 2000 ஆண்டுகளாக இனபாகுபாடுகளை எதிர்கொண்டிரு இருக்கிறோம். இன்னும் 200 ஆண்டுகளுக்கு இதனை நாம் எதிர்கொள்ள கூடாது எனவும் மோகன் பகவத் அந்த விழாவில் தெரிவித்தார். இதனை அடுத்து, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பற்றி பேசுகையில், 1947 இல் இந்தியாவிலிருந்து பிரிந்தவர்கள் (பாகிஸ்தான்) இப்போது தங்கள் முடிவுக்கு வருந்துகிறார்கள் மற்றும் இந்தியாவுடன் மீண்டும் ஒன்றிணைக்க விரும்புகிறார்கள் எனவும் தனது கருத்தை குறிப்பிட்டார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…