தர்பாங்க தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் லலித் யாதவ் வெற்றி பெற்றுள்ளார்.
243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.
பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் வேட்பாளர் லலித் குமார் யாதவ் 2,141 வாக்குகள் வித்தியாசத்தில் தர்பாங்க ரூரல் (Darbhanga Rural) தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.இதனை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லலித் குமார் யாதவ் 64,929 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணியின் ஜனதா தள வேட்பாளர் பரஸ் பத்மி (FARAZ FATMI) 62,788 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…