மாஸ்க் போடவில்லையென்றால் ரூ.1,000 அபராதம்…! – தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்கும் வகையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் தெலுங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்த அவர், 45 வயதை தாண்டி அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025