இன்று பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி விடுவிக்கிறார்.
பிரதமர் மோடியால் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி (பிஎம் – கிசான்) தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 4 மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என வருடத்துக்கு ரூ.6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்தத் தவணை நிதியை இன்று பிரதமர் விடுவிக்கிறார்.
இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1.38 லட்சம் கோடி நிதி விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, பிரதமர் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கவிருக்க உள்ளார். அதன்படி, 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…