நிதியமைச்சரின் 2 ம் கட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

இன்றைய அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட  அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில், ரூ.5.94 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்திருந்தார். மேலும், இந்த அறிவிப்பில் சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தும் விதமாக கருதப்பட்டது. இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அம்சங்கள். அதாவது, இன்றைய அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும், உணவு வழங்கவும், ரூ.11,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கடனுதவி பெற்ற விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 மாதமாக நீட்டிப்பு.
  • 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாளுக்கான ஊதியம் ரூ.182 இல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • அடுத்த 2 மாதங்கள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு தானிங்கள் வழங்க ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு.
  • முத்ரா திட்டத்தில் வட்டி சலுகைக்காக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்குவதற்காக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நபார்ட் வங்கி மூலம் ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.
  • நபார்ட் வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 23 மாநிலங்களில் அமலுக்கு வருகிறது என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 100% அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
  • சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு. இதில், ரூ. 10,000 வரை கடன் வழங்கப்படும்.
  • 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தை (ESI) பெறலாம்.
  • ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யும் அனைவரும் ஒரே ஊதியத்தை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ரேஷன் கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உணவு பொருள் வழங்கப்படும்.
  • குறைந்த விலை வீட்டுக்கான வட்டி மானிய திட்டத்திற்கு ரூ.70,000 கோடி ஒதுக்கீடு.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

3 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

4 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

5 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

6 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

6 hours ago