கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.
கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ .5000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு ‘கிரஹ லக்ஷ்மி’ என பெயரிடப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கையாள்வதில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாய் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண்ணின் கணக்கில் நேரடியாக மாற்றப்படும் என்று அவர் கூறினார்.
இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு விரைவில் தங்கள் கட்சி அட்டைகள் விநியோகத்தை தொடங்கும். அந்த அட்டையில் அடையாள எண் இருக்கும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இது செயல்படுத்தப்படும் என்றும் மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…