மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!

soldier died

மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் BSF ஜவான் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 

மணிப்பூர் மாநிலம் செரோவில் எல்லைப் பாதுகாப்புப் (பிஎஸ்எஃப்) படையினருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிசூடு தாக்குதல் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிசூடு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இரண்டு அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த BSF ஜவான் Ct/GD ரஞ்சித் யாதவ், கக்ச்சிங்கில் உள்ள ஜிவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். காயமடைந்த இரண்டு அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி பழங்குடியினர் சமூகத்தினர் இடையே கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலம் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இந்த சமயத்தில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர  இணையதள சேவை துண்டிப்பு ஜூன் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 3 வரை இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி வரை நீட்டிக்கட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்