இந்திய குடிமை சிவில் சர்வீஸ் தேர்வில் i.a.s. பணிக்கான தேர்வில் வெற்றி பெற்ற கண்பார்வை இழந்த பூர்ண சுந்தரி எனும் பெண்ணிற்கு சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய குடிமைப்பணி தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஐஎஸ் கான இடத்தில் வெற்றிபெற்றுள்ள மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாணவி பூரண சுந்தரிக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் பேசும் பொழுது, பார்வை மாற்று திறனாளியான இவர் தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் சீர்மிகு உயரத்தை கட்டி பெண்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமின்றி, தோல்விகள் மற்றும் தடைகளாலும் சோர்வுறும் மனிதர்கள் அனைவருக்குமே புதிய ஊக்கத்தையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தையும் விதைத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
மேலும் நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையும் அதற்கேற்ற கடின உழைப்பும் இருந்தால் எத்தகைய தடைகளையும் உடைத்தெறிந்து முன்னேறலாம் என்பதற்கு என் அன்புத்தங்கை பூரண சுந்தரி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, மக்கள் பணியில் சிறந்து விளங்கவும் மேலும் பல சாதனைகள் படைத்திடவும் தங்கைக்கு எமது புரட்சி வாழ்த்துக்கள் என சீமான் கூறியுள்ளார்.
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…