வீரேந்திர சேவாக்கின் சகோதரி அஞ்சு சேவாக் டெல்லியில் ஆம் ஆத்மியில் இணைந்தார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் சகோதரியும், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலருமான அஞ்சு சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். 2012-2017 வரை தெற்கு டெல்லி மாநகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலராக இருந்த அஞ்சு சேவாக் நேற்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
டெல்லியில் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் கொள்கைகளை விரும்புவதாகவும், டெல்லியில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளால் ஈர்க்கப்பட்டு ஆம் ஆத்மியில் சேர்ந்ததாக அஞ்சு சேவாக் கூறினார். அதேபோல சமூக சேவகர் அரவிந்த் சந்தேலாவும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா, அஞ்சு சேவாக் மற்றும் சமூக சேவகர் அரவிந்த் சண்டேலா ஆகியோரை கட்சிக்கு வரவேற்று பேசுகையில், டெல்லி அரசின் கொள்கைகள் மற்றும் டெல்லி வளர்ச்சி மாதிரியால் பாதிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ‘ஆம் ஆத்மி’ குடும்பத்தில் இணைகிறார்கள். முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலரான அஞ்சு சேவாக் ஒரு ஆசிரியரும் ஆவார். அவர் ஹிந்தி மற்றும் சமூக அறிவியலை கற்பித்து வந்தார். அதே நேரத்தில், கட்சியில் இணைந்த அரவிந்த் சண்டேலா, ஒரு சமூக சேவகர் மற்றும் தொழிலில் ஒரு தொழிலதிபர் என தெரிவித்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…