டெல்லி:காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தினத்தையொட்டி,கட்சி தலைமையகத்தில் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி கொடி ஏற்றும்போது,கயிறு கழன்று அவரது கைகளில் கொடி விழுந்தததால் கட்சியினர் அதிர்ச்சி.
காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தின விழா இன்று நாடு முழுவதும் அக்கட்சியினரால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில்,தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் கொடி ஏற்றுவதற்கு,இன்று காலை அக்கட்சி தலைவர் சோனியா காந்தி வருகை புரிந்தார்.
அவர் கொடி கம்பத்தில் ‘காங்கிரஸ் கொடி’ ஏற்றும்போது,கொடி சரியாக ஏறவில்லை என்பதால் அருகில் இருந்தவர் கொடியை ஏற்ற முயற்சித்து வேகமாக இழுக்க முயன்ற போது,கயிறு கழன்று சோனியா காந்தி அவர்களின் கைகளில் கொடி விழுந்தது.
காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட 137 வது ஆண்டு தினத்தில்,கட்சி கொடி இவ்வாறு விழுந்ததால்,சோனியா அவர்களும்,அங்கு அணிவகுத்து இருந்த கட்சியினர் ஏராளமானோரும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த வீடியோ,தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…