ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! 10 கோடிக்கு மேற்பட்டோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு!

diabetes

இந்தியாவில் இப்போது 100 மில்லியனுக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR-INDIAB) நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ஆய்வில், இந்தியாவில் தேசிய சராசரி  11.4% அல்லது 10.1 கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டில் 7 கோடியாக இருந்த பாதிப்பு, தற்போது 4 ஆண்டுகளில் 44% அதிகரித்துள்ளது என்று UK மருத்துவ இதழான ‘Lancet’ இல் வெளியிடப்பட்ட ICMR ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 கோடி பேர் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளுடனும், 31 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வளர்ந்த மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை நிலையாக இருந்தாலும், பலவற்றில் அவை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகின்றன.

இதில், குறிப்பாக கேரளா, புதுச்சேரி, கோவாவில் அதிக பாதிப்புகள் உள்ளன. அதன்படி, கோவா (26.4%), புதுச்சேரி (26.3%) மற்றும் கேரளாவில் (25.5%) சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக கணடறியப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற குறைவான பாதிப்பு உள்ள மாநிலங்களில், சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வு எச்சரிக்கிறது.

கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் சண்டிகரில் சர்க்கரை நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, அறிகுறிகளின் எண்ணிக்கை குறைவு. புதுச்சேரி மற்றும் டெல்லியில், அவை ஏறக்குறைய சமமாக உள்ளன, ஆனால் சர்க்கரை நோயின் பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில், ஆய்வாளர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளனர்.

அக்டோபர் 2008 முதல் டிசம்பர் 2020 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இருந்து 20 வயதுக்கு மேற்பட்டவர்களை மதிப்பீடு செய்தது. இம்முறை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடத்திய ஆய்வில் சக்கரை னாய் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மூத்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்