அத்வானிக்கு நடந்தது போல பிரதமர் மோடிக்கும் நடக்கும்.! பீகார் துணை முதல்வர் கருத்து.!

Tejaswi yadav

2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ஆட்சிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முடிவு காட்டுவர் என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். 

பீகாரில் கூட்டணியில்ல் இருந்த மதசார்பற்ற ஜனதா தளம் – பாஜக கூட்டணியில் இருந்து கடந்த வருடம் ஆகஸ்ட்டில் விலகி, ஜனதா தளம் மற்றும் ராஸ்டிரியா ஜனதா தளம் ஆகியவை மகா கூட்டணி அமைத்து,  நிதிஷ்குமார் முதல்வராகவும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்து வருகின்றனர்.

அண்மையில் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், எப்படி தனது தந்தை லாலு பிரசாத் யாதவ், கடந்தகாலத்தில் பாஜக பிரதமராக இருந்த அத்வானி சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தாரோ அதே போல, வரும் 2024 தேர்தலில் பிரதமர் மோடியின் ஆட்சியை நிதிஷ்குமார் முடிவுக்கு கொண்டு வருவார் என தேஜஸ்வி யாதவ் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்