மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு.
நெதர்லாந்தில் இருக்கும் Vrije Universiteit Amsterdam-ல் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் செய்யப்பட்ட ஆய்வில் மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது சர்வதேச அளவில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இடையே இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாஸ்டிக்கின் சிறிய துகள்களை Microplastics என்று அழைப்பார்கள். இந்த துகள் தான் மனித ரத்தத்தில் செல்களோடு, செல்களாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மொத்தம் 22 பேரின் ரத்தத்தை சோதனை செய்தனர். அதில் 17 பேரின் ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாக தகவல் கூறப்பட்டது. இந்த நிலையில், மனித ரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்துள்ளது. கூடுதல் ஆய்வுகளை நடத்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவ கவுன்சிலுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விஞ்ஞானிகள் 22 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் பிளாஸ்டிக் துகள் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…