மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.50,000 நன்கொடையாக அளித்த 3 வயது சிறுவன் கபீரின் வீடியோவை மும்பை போலீஸ் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து இருப்பதால், நான்காவது கட்ட ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொடிய வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வைரஸை எதிர்த்து இரவு பகலாக போராடி வருகின்றனர். இதனிடையே காவல்துறை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வெளியில் வராமல் வைரஸிடம் இருந்து பாதுகாத்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தகுந்த மரியாதையும், சிறப்பு தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.50,000 நன்கொடையாக அளித்த 3 வயது சிறுவன் கபீரின் வீடியோவை மும்பை போலீஸ் தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், அந்த சிறுவனை கப்கேக் விற்று திரட்டிய ரூ.50,000 காசோலையுடன் ஒரு கடித்தை சேர்த்து அளித்துள்ளான். அந்த கடிதத்தில், அன்புள்ள போலீஸ் மாமா, எங்களை நன்றாக கவனித்துக்கொண்டதற்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளான. மேலும், தயவுசெய்து கொரோனா வைரஸைப் பிடித்து உங்கள் துப்பாக்கியால் சுட்டுவிடுங்கள் என்றும் ரூ.50,000 க்கான காசோலையை போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங்குக்கு அந்த சிறுவனின் பெற்றோர்களுடன் சேர்ந்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…