சுஷாந்த் மரண வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் தம்பி ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோரை மும்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம், 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் போதைப்பொருள் உபயோகித்தும், அது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், நேற்று மும்பையில் உள்ள ரியாவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் வீட்டில் போதைப்பொருட்கள் இருந்ததும், ரியாவின் தம்பியான ஷோவிக் சக்ரபோர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஜைத் மற்றும் கைசன் இப்ராஹிம் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
அந்தவகையில் இன்று ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்தின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோருக்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், அவர்களை மும்பை, எஸ்பிளான்டேவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…