பஞ்சாயத்து சமிதி தலைவர் தேர்தலின் போது, ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் பான்பூர் பிளாக் முன்பு கூடியிருந்த கூட்டத்தின் மீது சனிக்கிழமையன்று(நேற்று) சிலிகாவின் பிஜேடி எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவ் தனது காரை மோதியதில்,காவல்துறையினர் உட்பட சுமார் 23 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பான்பூர் தொகுதி அலுவலகம் அருகே,அத்தொகுதி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
பான்பூர் ஐஐசி, எம்எல்ஏ அவர், ஒரு பத்திரிகையாளர் உட்பட பத்து காவல்துறையினர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவத்தால் பதற்றம் நிலவியதுடன்,எம்எல்ஏவின் வாகனத்தை அங்கிருந்த மக்கள் அடித்து நொறுக்கினர்.இதனால்,காவல்துறையினர் தலையிட்டு எம்.எல்.ஏவை அந்த இடத்திலிருந்து காப்பாற்ற வேண்டியிருந்தது.எனினும்,பலத்த காயம் அடைந்த எம்எல்ஏ பிரசாந்த்,முதலில் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக,மத்திய ரேஞ்ச் ஐஜி நரசிங் போலா கூறுகையில்:”பிஜு ஜனதா தளம் (பிஜேடி) எம்எல்ஏவை காவல்துறையினரும் சிலரும் கூட்டத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க முயன்றபோதும்,எம்எல்ஏ தடுக்கப்படுவதைத் தவிர்க்க முயன்றபோதும் அவர் தனது வாகனத்தை கூட்டத்தின் மீது மோதினார்.எனவே,அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று கூறினார்.
இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக பிஜேடி தலைவர் சஸ்மித் பத்ரா கூறியதாவது:”ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, சாமானியனாக இருந்தாலும் சரி வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது”என்று கூறினார்.
இதற்கு முன்னதாக,செப்டம்பரில்,பிரசாந்த் ஜக்தேவ் தனது சிலிகா தொகுதியின் பிஜேபி தலைவரைத் தாக்கிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பிஜேடியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.ஆகஸ்ட் 2020 இல், ஜூனியர் இன்ஜினியர் ஒருவர், ஜக்தேவ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.மேலும்,2016 ஆம் ஆண்டும், பெண் தாசில்தாரை தாக்கியதாக பிரசாந்த் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…