வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் பங்கேற்ற உத்திர பிரதேச விவசாய சங்க தலைவர்கள் தலா ரூ.50 லட்சம் தனிநபர் பத்திரங்களை சமர்ப்பிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பல் மாவட்டத்தில் ஆறு விவசாய தலைவர்களுக்கு தலா ரூ .50 லட்சம் தனிநபர் பத்திரங்களை வழங்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இதில் பாரதிய கிசான் யூனியன் ( Bharatiya Kisan Union) மாவட்டத் தலைவர் ராஜ்பால் சிங் யாதவ் மற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்களான ஜெய்வீர் சிங், பிரம்மச்சாரி யாதவ், சத்யேந்திரா, ரோஹ்தாஸ் மற்றும் வீர் சிங் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
இது குறித்து வட்ட அலுவலர் அருண் குமார் சிங் கூறுகையில்,இந்த தொகையானது எழுத்துப்பிழை ஆகும் .மாஜிஸ்த்ரேட் விடுப்பில் உள்ள நிலையில் பிழையை சரிசெய்து ரூ .50,000 பத்திரமாக மாற்றி அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக உத்திரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…