தனது ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தனது ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் வித்தியாசமாகநடந்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவரின் ஆசிரியர் எச்சரித்துள்ளார். இது குறித்து மாணவியின் தாய் தனது மகளிடம் விசாரித்த போது, அந்தரங்க உறுப்பை தந்தை தொட்டதாக தெரியவந்தது.
இதனையடுத்து, கணவர் மீது மாணவியின் தாய் புகார் அளித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியின் தந்தை தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து செல்ல விரும்புவதால் தான் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை முன் வைப்பதாக கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் குழந்தைக்கு அரணாகவும் அறங்காவலராக இருக்க வேண்டிய தந்தை பாலியல் வன்கொடுமை செய்வததற்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் 40 வயதான அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், மாணவியின் தந்தையின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் தோல் தோல் தொடுவது குற்றமில்லை. என்றும் வாதிட்டார். இதனை நிராகரித்த மும்பை நீதிமன்றம் அவரது தந்தை செய்த இந்த செயல் மிகவும் மோசமான குற்றம் ஆகும். சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதை விட குறைவான தண்டனை வழங்க இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, சிறப்பு நீதிபதி எச்.சி. ஷெண்டே, குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை “வியக்கத்தக்கது” என்று குறிப்பிட்டார், பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தை தனது விரலால் தனது அந்தரங்க உறுப்பைத் தொட்டதாக ஒருபோதும் கூறவில்லை. இதுபோன்ற வாதங்களால் நான் ஆச்சரியப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…