இந்த ஆண்டில் ஜூன் வரை இவ்வளவு பேர் இந்திய குடியுரிமை துறப்பு- ஜெய்சங்கர்.!

இந்த ஆண்டில் ஜூன் வரை 87,026 இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்.
இந்தியர்களில் வெளிநாட்டில் குடியேறுவது தற்போது அதிகமாகியுள்ள நிலையில், இந்த ஓராண்டில் முதல் பாதியில் மட்டும் அதாவது ஜூன் 2023 வரை, 87,026 இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்வதற்கு தங்களது இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியர்களில் அதிகம் பேர் வெளிநாடுகளில் பணியிடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.
மேலும் படிப்பிற்காகவும் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர், இதுதவிர இந்தியர்களில் பலர் தனிப்பட்ட வசதிக்காக வெளிநாட்டு குடியுரிமையை தேர்வு செய்கின்றனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்திய தேசத்தின் சொத்து என கூறினார்.
இது தவிர, 2011 முதல் 17.50 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என்று ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார். இந்தியர்களில் வெளிநாடுகளில் வெற்றிகரமாகவும், செழிப்பானதாகவும் புலம்பெயர்ந்தோர் இந்தியாவுக்கு மேலும் நன்மை பயக்கின்றனர் என தெரிவித்தார்.