தெலுங்கானாவில் சமூக பரவல்..சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு.!

தெலுங்கானாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலைக்கு சென்று விட்டது என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெலுங்கானா பொது சுகாதார இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ராவ் கூறுகையில், “தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலைக்கு சென்றுவிட்டது. எனவே, அடுத்த 4 முதல் 5 வாரங்களுக்கு மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.
பொதுமக்கள் கை கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கூறினார். தெலுங்கானாவில் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை படி 50,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025