சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!
சர்வதேச விண்வெளி நிலையம் செல்ல ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலன் இருக்கையில் அமர்ந்தார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா

அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்துக்கு திட்டமிட்டது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, போலாந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு மற்றும் அமெரிக்க வீரர் பெக்கி விட்சன் ஆகியோர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல தயார் நிலையில் உள்ளனர்.
பல்வேறு காரணத்தால் 6 முறை பயணம் தடைப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் 12.01 மணிக்கு இப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாசா விண்வெளி தளத்தில் இருந்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு ஷுக்லா விண்ணுக்கு பறக்கிறார்.
Live on now on @NASA+, four private astronauts from @Axiom_Space count down to their 2:31am ET launch today aboard the @SpaceX Dragon from @NASAKennedy to the orbital outpost. https://t.co/LfDFuoYwij
— International Space Station (@Space_Station) June 25, 2025
மேலும் ஸ்பேஸ்எக்ஸ் வானிலை 90 சதவீதம் ஏவுதலுக்கு சாதகமாக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வதற்காக புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் டிராகன் விண்கலத்தில் ஏறினர். மிஷன் பைலட்டாக சுபன்ஷு சுக்லா செயல்படும் நிலையில், 4 வீரர்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 14 நாட்கள் இருந்து, சுமார் 60 அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனர்.
Dragon missions have enabled more than 1,000 science and research projects in low-Earth orbit and aboard the orbiting laboratory, including flying 60 scientific studies representing 31 countries for today’s Ax-4 mission → https://t.co/9R2wTDrQJD
— SpaceX (@SpaceX) June 25, 2025
இப்பொது, ஹட்ச் பாதுகாப்பாக மூடப்பட்டு, விண்கலனின் கசிவுகள் உள்ளதா என சரிபார்க்கப்பட்டு, அனைத்து தகவல் தொடர்பு மற்றும் சூட் சோதனைகளும் முடிந்துவிட்டன, இருக்கைகள் ஏவப்படுவதற்காக சரிசெய்யப்பட்டு, Ax-4 குழுவினர் ஏவலுக்குத் தயாராக உள்ளனர்” என்று ஸ்பேஸ் எக்ஸ் தனது x பதிவில் தெரிவித்துள்ளது.
Dragon’s hatch is closed, all communication and suit checks are complete, the seats are rotated, and the Ax-4 crew is ready for launch!
— SpaceX (@SpaceX) June 25, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025