நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி செய்க.. உள்துறைக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்.!

Published by
மணிகண்டன்

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்று 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  மகாராஷ்டிராவை சேர்ந்த சாகர் சர்மா, டி.மனோரஞ்சன் என்பவர்கள் நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவையில் உள்ளே குதித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மஞ்சள் வண்ண பூச்சை பரப்பவிட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் உண்டானது.

நாடாளுமன்ற அத்துமீறல்.! இனி பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.. சபாநாயகர் அறிவிப்பு.! 

அதே போல நாடளுமன்ற வளாகத்தில் வெளியே ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர். அப்போது நீலம் , நாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை. மத்திய அரசு எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. எங்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். எங்கள் மீது கவனத்தை திருப்பி எங்கள் கருத்தை கேட்க வேண்டும் என்றே இவ்வாறு செய்தோம் என பேசினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது யாருக்கும் நாடாளுமன்றத்தில் பார்வையாளர் அனுமதி கிடையாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். மேலும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன.  நாடாளுமன்றம் செல்லும் அனைத்து சாலைகளும் முழுதாக அடைக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பை முழுதாக ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய உள்துறை செயலகத்திற்கு நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.

Recent Posts

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

26 minutes ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

50 minutes ago

LSG vs GT: இறுதி வரை போராட்டம்.. வீன் போன ஷாருக் அரைசதம்.. லக்னோ மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

7 hours ago

சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!

கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…

8 hours ago

LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

10 hours ago

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…

11 hours ago