பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாகவும், தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி ஷெஹ்சாத் என்ற மற்றொரு நபரை உ.பி. ஏ.டி.எஸ் கைது செய்தது.

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்களின் கைது எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
தற்பொழுது, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் வாரணாசியைச் சேர்ந்த ஒருவரை உத்தரப் பிரதேச காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) கைது செய்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதாக துஃபைல் என்ற நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான தெஹ்ரீக்-இ-லப்பைக்கின் தலைவர் மௌலானா ஷா ரிஸ்வியின் வீடியோக்களை வாட்ஸ்அப் குழுக்களில் துஃபைல் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கும் இந்தியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவதற்கும் பழிவாங்க அழைப்பு விடுக்கும் செய்திகளையும் அவர் அனுப்பியதாக உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
UP ATS arrests one Tufail s/o Maqsood Alam from Varanasi, on charges of spying for Pakistan. He was sharing important information about India’s internal security with Pakistan.
On developing this intelligence, ATS Field Unit Varanasi confirmed that Tufail was in contact with… pic.twitter.com/cw18siTAeI
— ANI (@ANI) May 22, 2025
விசாரணையில், அவர் ஞானவாபி, ராஜ்காட், செங்கோட்டை மற்றும் நமோ காட் உள்ளிட்ட முக்கியமான இடங்களின் படங்களை பாகிஸ்தான் தொடர்புகளுடன் பகிர்ந்து கொண்டது தெரியவந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025