தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அத்து மீறி நுழைந்த தமிழக மீனவர்களின் பல கோடி மதிப்பிலான விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருந்தனர் . அதில் 94 இந்திய படகுகளை ஊர் நீதிமன்றமும் ,37 படகுகளை மன்னார் நீதிமன்றமும் காவலில் வைக்க உத்தரவிட்டனர் . அதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு சிறைப்பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது . அதில் சேதராமில்லாமல் இருந்த 10 படகுகளை மட்டுமே இந்திய மீனவர்கள் கொண்டு சென்றனர் . மற்ற படகுகள் அனைத்தும் பழுதடைந்து சேதாரமுடன் காணப்பட்டது
அதில் மீதமுள்ள 121 விசைப்படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் கடலில் மாசு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது . இந்த புகாருக்கான வழக்கு விசாரணைக்கு வந்த போது இலங்கை கடற்படையினரின் காவலில் உள்ள 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . இது தமிழக மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனுடன் அவர்கள் அழிக்கும் படகுகளுக்கான நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…