வஞ்சிகிறது அரசு… வைக்கோலுக்கு நெருப்பு வைத்த விவசாயிகள்…!

பஞ்சாப் மாநிலத்தில் வைக்கோலை விவசாயிகள் எரித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே புர்ஜ் கிராம விவசாயிகள் அனைவரும் வைக்கோல்களை எரித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இவ்வாறு எரிப்பதற்கு அரசுதான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
இவ்வாறு விவசாயிகள் வைக்கோலுக்கு வைத்த நெருப்பினால் அங்கு புகை மண்டலம் சூழ்ந்து, காற்று மாசு ஏற்பட்டது.
இது குறித்து பேசிய விவசாயிகள் தங்களால் வைக்கோல்களை எடுத்துச் செல்ல முடியாது.இதற்கு அரசு உதவ வேண்டும்.
மேலும் விவசாயிகள், 2 முதல் 3 ஏக்கர் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகளிடம் டிராக்டர் வசதியில்லை இதனால், வைக்கோலை எரிக்க வேண்டிய சூழல் உள்ளது என்று விளக்கம் அளித்தனர்.போதிய வசதிகளை செய்து தராத அரசு தான் இந்த புகை மற்றும் காற்று மாசு ஏற்படுவதற்கு, காரணம் என்று குற்றம்சாட்டினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025