“கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” என முதல்வர் தெரிவித்தார்.
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனாவால் இதுவரை 1.15 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,500-ஐ கடக்கவுள்ளது.
இதன்காரணமாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இதற்கு மத்திய அரசும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு முழு ஆதரவு அளித்த அணைத்து கட்சிகளுக்கும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு பணியில் அரசாங்கம் மட்டும் ஈடுபட்டால் நிச்சியமாக தோல்வியை மட்டுமே சந்தித்திருப்போம். அதன்காரணமாக, மத்திய அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் உட்பட அனைவரிடமும் சென்று ஆதரவை கேட்டோம் என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு பணியில் அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவை கேட்டோம் எனவும், அவர்கள் அளித்த ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் நன்றி தெரிவித்தார்.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…