மீண்டும் பதற்றம்: மணிப்பூர் முதலமைச்சர் வீட்டை சூறையாட முற்றுகையிட்ட மாணவர்கள்!

Manipur Chief Minister

மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங்குக்கு சொந்தமான வீட்டை, முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டி அடித்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக பல மாதங்களாக கலவர சூழல் நிலவும் நிலையில், சில நாட்களுக்குமுன் அங்கு மைதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் இரு மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது, இந்த மாண்வர்களின் மரணத்தைக் கண்டித்து, சக மாணவர்கள் நடத்திய போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இன்றும் ஓயாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்பாலின் கிழக்குப் பகுதியான ஹெய்கங்கில், அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங்கிற்கு சொந்தமான வீட்டை நோக்கி ஏராளமானோர் முற்றுகையிட்டனர்.

இதையடுத்து, பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போது, போலீசார் தடுத்த நிலையில், அங்கு பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது. முதலமைச்சரின் வீடு மீது தாக்குதல் நடத்த முயற்சியின் போது, வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி  துரத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் மணிப்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்திற்கு தீ வைத்தனர். அதே நாளில், மணிப்பூரின் பல மாணவர் அமைப்புகள் மணிப்பூரில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்