தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பு விவகாரம்: கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புக்கு 40க்கும் மெர்க்ப்பட்ட கன்னட அமைப்புகள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ன. தற்போது, முழுஅடைப்பை முன்னிட்டு, பெங்களூரு நகரில் 144 தடை உத்தரவு அமலானது. மேலும், கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்திவைக்கப்பட்டுள்னர்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட காலமாகவே பல்வேறு கருத்து மோதல்கள் அரங்கேறி வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவு படி, கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு தொடர் கோரிக்கை வைத்து வருகிறது. அனால் கர்நாடக அரசு, காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை அதனால் தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகின்றன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநில எல்லைவரை மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகிறது.
அங்கு தற்பொழுது, முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள், ஈரோடு பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
பெங்களூரு காவல்துறை அறிவிப்பு
முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு நகரில் இன்று இரவு 11.59 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு அடைப்பு நடைபெற்றாலும், இன்று அரசு பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வேலைக்கு வரவேண்டும் என போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பெங்களூருவில் இன்று 5 பேருக்கு அதிகமாக மக்கள் கூடக்கூடாது என்றும், எந்தவித பேரணியும் நடத்தக்கூடாது என்றும் பெங்களூரு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தமிழக எல்லைப் பகுதி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும் பெங்களூரு செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஒசூர் வரை மட்டுமே செல்லும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களான 4 மாவட்டங்களில் கண்காணிப்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.