சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில், அவரை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய சுதந்திர தினத்தன்று அவரின் ஓய்வினை அறிவித்தார். இதனை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், மனமுடைந்தனர். தோனி ஓய்வு அறிவித்த சிறிது நேரத்திலே, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா தனது ஓய்வினை அறிவித்தார்.
இதில் முன்னாள் கேப்டன் தோனி, அவரின் 39 வயதில் ஓய்வு அறிவித்தார். ஆனால் சுரேஷ் ரெய்னா, தனது 33 வயதில் ஓய்வு அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இவர்களை ஓய்வு செய்திகளை அறிந்த ரசிகர்கள், இதர வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், தோனியை பாராட்டி கடிதம் எழுதிய பிரதமர் மோடி, ரெய்னாவுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், கிரிக்கெட்டுக்காவே வாழ்ந்தீர்கள், கிரிக்கெட்டையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளீர்கள் என கூறினார். மேலும், நீங்கள் ஓய்வு பெற்றீர்கள் என்ற வார்த்தையை கூற முடியாத அளவுக்கு இளமையும், ஆற்றலும் கொண்டவர் என தெரிவித்த அவர், உங்கள் வாழ்க்கையில் அடுத்த இன்னிங்க்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
இதற்கு சுரேஷ் ரெய்னா நன்றி தெரிவித்து, அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் ஆடும்போது நாட்டுக்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்துகிறோம் என பதிவிட்டுள்ள ரெய்னா, நாட்டின் மக்கள் மற்றும் அதன் பிரதமரிடம் இருந்து கிடைக்கும் பாராட்டை விட வேறேன்ன வேண்டும் என பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…