மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.இவருக்கு வயது 67 ஆகும். இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சுஷ்மாவின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.குடியரசு தலைவர் ,பிரதமர் உள்ளிட்டோர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினார்கள்.இதற்கு பின்னர் சுஷ்மாவின் உடல் பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பின் சுஷ்மா சுவராஜ் இறுதி ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.லோதி சாலை மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது .பின்னர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் நரேந்திர மோடி ,மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா,பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.இறுதியாக சுஷ்மா உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…