கணவனின் நடத்தை மீது சந்தேகம் இருந்ததால் வேண்டுமென்றே கணவரை பழிவாங்குவதற்காக வீட்டில் கஞ்சா செடி வைத்து போலீசில் தகவல் தெரிவித்த மனைவி கைது.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கும் நாடு முழுவதிலும் தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், ஆங்காங்கு சிலர் தங்களது வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்து அடிக்கடி போலீசில் சிக்கிக் கொள்வதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. தங்களது தேவைக்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் தான் வீட்டில் கஞ்சா செடி வைத்திருப்பவர்களை பார்த்திருப்போம். ஆனால், கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக கஞ்சா செடி வைத்துள்ள பெண் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்னும் இடத்தில் வசித்து வரக்கூடிய தம்பதிகள் இருவருக்கு இடையே மனகசப்பு இருந்துள்ளது. தனது கணவரின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட பெண் அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் கஞ்சா செடி ஒன்றை நட்டுவைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் கணவர் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசில் புகாரும் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரித்த பொழுது அங்கிருந்து 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெண்மணி தான் வேண்டுமென்றே கஞ்சா செடியை வைத்து கணவரை பழி வாங்கி உள்ளார் என்ற விஷயமும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரித்த பொழுது கணவர் அடிக்கடி தாமதமாக வீடு திரும்பியதால் அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பழி வாங்குவதற்காக தான் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…