கேரளா தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 5 பேர் நாளை ஆஜராக கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டி ஒன்றில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, கடத்தலில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் ஈடுபட்டுள்ளார் என்பது வெளிவந்தது. பின்னர் அவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உட்பட 5 பேர் நாளை ஆஜராக கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஸ்வப்னா சுரேஷ் நெஞ்சுவலி காரணமாக திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…