டாடா குழுமம் சார்பில் ரூ.1,500 கோடி நிதியுதவி – ரத்தன் டாடா அறிவிப்பு.!

Default Image

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 909 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு நோய் தடுப்பு பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

அண்மையில் பிரதமர் மோடியும் விருப்பமுள்ளவர் நிதியுதவி தரலாம் என்று தெரிவித்திருந்தார். கொரோனா தடுப்புப் பணிகளுக்கு டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக ரத்தன் டாடா அறிவித்துள்ளார். மேலும் டாடா சன்ஸ் சார்பில் ரூ.1000 கோடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக டாடா குழுமம் சார்பில் மத்திய அரசுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ரத்தன் டாடா அவரது ட்விட்டர் பக்கத்தில், கொவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொள்வது கடினமான சவால்களில் ஒன்றாகும். டாடா அறக்கட்டளைகள் மற்றும் டாடா குழுமம் கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக உதவியுள்ளது என்றும் அதை விட தற்போது உள்ள நிலை மிகமுக்கியமானது எனத் தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுப்பதற்கான அவசர தேவைகளுக்கு ரூ.500 கோடி நிதி வழங்குவதாக குறிப்பிட்டார்.
 

டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவியில் இந்த உபகரணங்களை வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளது :

  • மருத்துவ பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்.
  • அதிகரிக்கும் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையாக்கச் சுவாச கருவிகள்.
  • தனிநபர் சோதனையை அதிகரிக்கும் வகையில் சோதனைக் கருவி. 
  • பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும்.
  • சுகாதார ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் அறிவு மேலாண்மை மற்றும் பயிற்சிக்காகவும் செலவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்