தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அனைத்து நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல் மிரட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மத்திய ,மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
unknown nodeஇந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில்,சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அவரை மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிகை 42 ஆக உயர்ந்துள்ளது.