சிறப்பு வகுப்பு உள்ளது எனக்கூறி தனிமையில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாபில் உள்ள ஜாலந்தர் எனும் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வரக்கூடிய பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மற்ற மாணவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு அந்த மாணவிக்கு மட்டும் சிறப்பு வகுப்பு உள்ளது என கூறி அம்மாணவியை ஆசிரியர் தனிமைப்படுத்தியுள்ளார்.
அதன்பின் தனிமையில் இருந்த அந்த மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளார். அங்கிருந்து தப்பித்த அந்த பத்தாம் வகுப்பு மாணவி தனது வீட்டிற்கு இந்த விஷயத்தை கூறியதும், மாணவியின் உறவினர்கள் ஆசிரியர்கள் வீட்டுக்கு நேரில் சென்று தாறுமாறாக ஆசிரியரை அடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உறவினர்களிடமிருந்து ஆசிரியரை காப்பாற்றி, அதன் பின் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது 354-ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து உள்ளனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…