BJP [Telangana]
நவம்பர் மாதத்தில், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம் , தெலுங்கானா என 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
நேற்று பாஜக தரப்பில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவிற்கு தற்போது 52 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டது.
இதில் 3 பாஜக எம்.பி.க்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் 118 தொகுத்திகளில் போட்டியிட்டு, கோஷாமஹால் தொகுதியில் மட்டுமே பாஜக சார்பில் டி ராஜா சிங் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, டி.ராஜா சிங் மீது சர்ச்சை கருத்துக்கள் பேசியது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யபட்டார் என்பதும், பின்னர் அண்மையில் அந்த சஸ்பெண்ட் தொடர்பாக டி.ராஜா சிங் விளக்கம் அளித்ததை தொடர்ந்து மீண்டும் அவர் பாஜக கட்சியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவில் நான்கு எம்.பிக்கள் பாஜக விடம் உள்ள நிலையில், அதில் மூன்று பேர் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர். அடிலாபாத் எம்பி சோயம் பாபு ராவ் போத் தொகுதியிலும், நிஜாமாபாத் எம்பி அரவிந்த் தர்மபுரி கொருட்லாவிலும், கரீம்நகர் எம்பியுமான பாண்டி சஞ்சய் குமார் கரீம்நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அமைச்சரவையில் இருந்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த எட்டலா ராஜேந்தர், தற்போது பாஜக சார்பில் ஹுசூராபாத்தில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…