சாமானிய மக்களுடனும் தொடர்பில் இருப்பதற்கான சிறந்த வழித்தடம் மன் கி பாத்..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி

PM Modi

பிரதமர் மோடியின் மனதின் குரல் 100வது அத்தியாயம் தொடங்கியது.

பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி 100வது அத்தியாயம் வானொலியில் ஒலிபரப்பாகி வருகிறது. மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்வு மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில், சாமானிய மக்களுடனும் தொடர்பில் இருப்பதற்கான சிறந்த வழித்தடமாக மன் கி பாத் நிகழ்ச்சி இருக்கிறது என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மன் கி பாத் 100வது நிகழ்ச்சியில் பேசிய அவர், இதில் ஒவ்வொரு முறை பேசும்போதும் நாட்டு மக்களிடம் இருந்து விலகாமல் அவர்கள் உடன் இணைந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 100-வது அத்தியாயத்தை எட்ட உதவிய நாட்டு மக்களுக்கு எனது நன்றிகள் என குறிப்பிட்டார்.

ஐநா சபையின் தலைமையகத்திலும் இந்நிகழ்வு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்வுக்காக ரூ.100 நாணயமும் வெளியிடப்பட உள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விலி பார்லே பகுதியில் நடைபெற இருக்கும் இந்த மான் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் மோடி தொகுத்து வழங்கும் ‘மன் கி பாத்’ வானொலியில் நாட்டு மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து உரையாற்றினார். இது முதன்முதலில் அக்டோபர் 3, 2014 அன்று தொடங்கியது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்