உயிரிழந்த தனது தாயின் சடலத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட 54 வயது மகன் ஒரு வாரமாக ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் எனும் பகுதியில் தனது 54 வயது மகனுடன் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னொரு மகனும் மகளும் உள்ளனர் ஆனால் அவர்கள் வெளிநாட்டில் உள்ளனராம். அவருடன் வசிக்கும் 54 வயது மகனுக்கு மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது 54 வயது மகனுடன் வசித்து வந்த இந்தப் பெண்மணி கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயற்கையாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது மகன் அந்த தாய் உடனேயே ஒரு வார காலமாக அந்த வீட்டிலிருந்துள்ளார்.
அண்டை வீட்டில் இருந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே துர்நாற்றம் வீசுவதாகவும் அந்த பெண்மணியின் வீட்டுக்கதவு பூட்டப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த கதவை உடைத்து பார்த்த போது கிட்டத்தட்ட இறந்து ஒரு வாரத்திற்கு மேலாக இருக்க கூடிய சிதைந்த நிலையிலான பெண்மணியின் சடலத்தை கண்டு அதிர்ந்து உள்ளனர்.
மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த பொழுது அவரது 54 வயது மன நோயாளியான மகனும் தனது தாயுடன் இருந்துள்ளார். மேலும் அவர் ஒரு வாரமாக உணவின்றி சரியான கவனிப்பு இன்றி மிக மோசமான நிலையில் இருந்துள்ளார். உடனடியாக உடல் சிதைந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றிய போலீசார், அவரது மகனையும் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்பொழுது அந்த நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அப்பெண்மணியின் மரணத்திற்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…