“ஆம்பன் புயல்” வங்கக்கடலில் இன்று உருவாகிறது .!

Published by
Dinasuvadu desk

வங்ககடலில் இன்று ஆம்பன் புயல் மாற வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்ககடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம்  நாளை (அதாவது இன்று) ஆம்பன் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. ஆம்பன் புயலால் ( Amphan cyclone) வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை வரை வடமேற்கு திசையிலும் , அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் ஆம்பன் புயல் நகர வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் மற்றும் 19 -ம் தேதிகளில் மணிக்கு 75-85 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

ஆம்பன் புயலால் கேரளா , கர்நாடகா மாநிலங்களில் காற்றின்  ஈர்ப்பு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் தெற்கு  வங்க கடல் மற்றும் வடக்கு வங்கக்  கடல்  உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது. 

Published by
Dinasuvadu desk

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

50 minutes ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

1 hour ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

4 hours ago