பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது.
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பாஜக தலைமை எடுத்த முடிவின் அடிப்படையிலேயே ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னதாக பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, பி.எஸ்.எடியூரப்பா, ராவத் ஆகியோர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது. அவர்கள் செயல்படாத முதல்வர்கள் என்பதை பாஜக தலைமை எப்போதும் உணர்ந்தது? பி.எஸ்.எடியூரப்பா, ராவத் மற்றும் ரூபானி பல மாதங்களாக செயல்படவில்லை என்பது சம்பந்தப்பட்ட மாநில மக்களுக்கு தெரியும். மாற்றப்பட வேண்டியவர்கள் அதிகம், ஹரியானா, கோவா, திரிபுரா… பட்டியல் நீளமானது என பதிவிட்டுள்ளார்.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…