திருப்பதியில் கோலாகாலமாக கொண்டாடப்படும் பிரம்மோற்சவ விழா…. அலைமோதும் மக்கள் கூட்டம்!

Brahmotsava festival

பிரம்மோற்சவம் என்பது பிரம்மனால் நடத்தப்படும் உற்சவம் என்று பொருள். அனைத்து வைணவ ஆலயங்களிலும் பிரம்மோற்சவம் விழா கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பிரம்மோற்சவம் உருவான கதை :

ப்ருகு என்ற முனிவர் விஷ்ணுவை பார்க்க வைகுண்டம் செல்கிறார். அப்போது விஷ்ணு அறியாததைப் போல் தூங்கிக் கொண்டிருக்கிறார். கோபம் கொண்ட முனிவர் திருமாலின் மார்பில் எட்டி உதைக்கிறார். திருமாலின் மார்பில் வாசம் கொள்கிறவர் திருமகள் ஆவார். விஷ்ணு அதை பொருள்படுத்தாமல் முனிவருக்கு தொண்டு செய்கிறார். கோபமடைந்த திருமகள் பூலோகம் சென்று விடுகிறார்.

அதனால் திருமாலே வைகண்டத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்து திருவேங்கட மலையில் தங்கி விடுகிறார். திருமாலின் வருகையை வரவேற்கும் விதமாக பிரம்மன் எடுத்த பெரிய விழாவை பிரமோற்சவ விழா. இது 9 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதன் கடைசி நாள் திருவோணம் நட்சத்திரத்தில் முடியும்.  நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வரும் பாரம்பரிய விழாவான திருப்பதி பிரமோற்சவ விழா ஏழுமலையான் கோவிலில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 18ஆம் தேதி திங்களன்று திருப்பதி மலையப்பசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. திருப்பதி மலையப்பசுவாமிக்கு பிரம்மன் முன்னெடுக்கும் விழாவாக இந்த பிரமோற்சவம் விழா கொண்டாடப்படுகிறது. தினமும் திருப்பதி மலையப்ப சுவாமி பக்தர்கள் முன் எழுந்தருளி காட்சியளித்து வருகிறார். தினமும், வீதி உலா, கலை நிகழ்ச்சிகள் என திருப்பதி திருவிழா கோலம் பூண்டுள்ளது. நேற்று  நான்காவது நாளில் இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் சர்வ பூபால வாகன புறப்பாடு நடைபெற்றது.

கோவில் மாட வீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.இந்த புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து வாகன மண்டபத்தை அடைந்த உற்சவர்கள் தங்க சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து இன்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகன சேவை  நடைபெறுகிறது. காலையில் மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5 ஆம் நாள் உற்சவமாக நடைபெறும் கருட சேவையை காண நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு குவிந்துள்ளனர்.  தற்போது வரை லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்துள்ளனர். எனவே, செப்டம்பர் 23 காலை 8 மணி முதல் 10 மணி வரை அனுமந்த வாகன சேவை நடைபெற இருக்கிறது. மாலை நான்கு மணி முதல் ஐந்து வரை சொர்ணரதம் நடைபெற இருக்கிறது. இரவு 7 மணி முதல் ஒன்பது மணி வரை கஜ வாகனம் நடைபெறும்.

செப்டம்பர் 24 காலை 8 மணி முதல் 10 மணி வரை சூரிய பிரபு வாகன சேவை நடைபெற உள்ளது. இரவு 7 முதல் 9 வரை சந்திர பிரபு வாகன சேவை நடைபெற உள்ளது. செப்டம்பர் 25ம் தேதி காலை 6:00 மணிக்கு பிரதோஷம் நடைபெறும். ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை அஸ்வ வாகன சேவை நடைபெறும்.

செப்டம்பர் 26 காலை 3 மணி முதல் 6மணி வரை பல்லக்கு உற்சவம். காலை 6:00 மணி முதல் 9 மணி வரை சக்கரா ஸ்தானம். அன்றுடன் பிரம்மோற்சவம் முடியும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பல இடங்களிலிருந்து திருப்பதிக்கு வந்துள்ளன. கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு லட்சம் மக்கள் சாமி தரிசனம் பார்க்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் காத்திருப்பதாக கூறுகின்றன. மேலும் இலவச வரிசையில் காத்திருப்பவர்கள் சாமி தரிசனம் செய்ய 6 இருந்து 7 மணி நேரம் ஆகின்றது என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்