சரக்குக்கு சைட் டிஷ் கிடைக்காததால் சிறுவனை கொலை செய்த கொடூரனிடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மிருகங்களாக மாறக்கூடிய மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து காணப்படுகிறார்கள். தென்கிழக்கு டெல்லியில் உள்ள கலிண்டி குஞ்ச் எனும் பகுதியில் ஷாதாப் எனும் 20 வயது இளைஞர் சாலையோரமாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். போதை தலைகேறவே தொட்டுக்கொள்ள ஒன்றுமில்லாமல் குடித்துக்கொண்டிருந்தவருக்கு சைடு டிஷ் தேவைப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த சமயம் சாலையோரமாக சென்று கொண்டிருந்த 14 வயது சிறுவனிடம் திண்பண்டம் இருக்கிறதா என கேட்க அவன் தன்னிடம் இல்லை என கூறியுள்ளான். தனக்கு வேண்டும் என குடிகார ஷாதாப் தகராறு செய்துகொண்டே இருந்துள்ளார். அதன் பின் கோவத்தில் அந்த சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதனால் மண்டையில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். போதையில் சிறுவனை கொலை செய்த கொடூரனை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…