அகமதாபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.67.07 கோடியும், டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் ரூ .64.78 கோடி வங்கி மோசடி செய்தது தொடர்பாக இரண்டு தனித்தனியான வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் சில்வாசா உள்ளிட்ட இடங்களில் உள்ள கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம்,அதன் இயக்குநர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.67.07 கோடி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கிருஷ்ணா நிட்வேர் டெக்னாலஜி லிமிடெட், அதன் இயக்குநர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
டெல்லி மற்றும் நொய்டாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஆல்பைன் ரியல்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குநர்கள், பஞ்சாப் & சிந்து வங்கி அளித்த புகாரின் பேரில் இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 64.78 கோடி ரூபாய்க்கு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்கள் மீது வங்கி நிதிகளை திசை திருப்புதல் அல்லது பறிமுதல் செய்தல், முறைகேடு செய்தல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…