Categories: இந்தியா

மாநில MBBS இடங்களுக்கு கட்டுப்பாடுகள் என்ன.? மத்திய அரசு நிறுத்திவைத்ததன் பின்னணி…

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தமாக 71 மருத்துவ கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் என மொத்தம் 6000 அரசு மருத்துவ இடங்கள் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்னர் தேசிய மருத்துவ ஆணையமானது புதிய கட்டுப்பாடுகளை மருத்துவ கல்லூரிகளுக்கு விதித்தது. அதன்படி மாநிலத்தின் மக்கள் தொகையை கணக்கிட்டு பத்து லட்சத்திற்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அவ்வாறு கணக்கிட்டால் தமிழக மக்கள் தொகையின் கணக்கிட்டீன்படி தமிழகத்திற்கு குறைவான மருத்துவ இடங்களே கிடைக்கும் நிலை உருவானது.

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

இதனால் தமிழகத்தில் மருத்துவ இடங்கள் குறையும் நிலை மற்றும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முடியாத சூழலும் உருவானது. இதற்கிடையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை கல்லூரி, திருப்பூர் மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் புதிய மாணவர் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிறுத்தியது. மருத்துவ இடங்கள் மற்றும் மேற்கண்ட கல்லூரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியது.

மருத்துவ இடங்கள் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதி வந்தனர்.  இந்த நிலையில் தான் தற்போது தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. அதன் படி, வரும் 2025ஆம் ஆண்டு வரை ‘புதிய மருத்துவ இடஒதுக்கீடு கட்டுப்பாடு’ஆனது அமலுக்கு வராது என்றும் 2025க்கு பின்னர் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 hour ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

2 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

2 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

3 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

3 hours ago